அனுமதியின்றி வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை அகற்றம்

திண்டுக்கல்லில் அனுமதியின்றி வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டது.

Update: 2021-08-11 17:20 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் சவேரியார்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியின் முன்பு திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கு பீடம் அமைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பீடத்தில் 5 அடி உயரத்தில் வெண்கலத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை 500 கிலோ எடை கொண்டது. மேலும் விரைவில் திறப்பு விழா நடத்தப்பட இருந்தது.

இந்த நிலையில் சிலை வைக்கப்பட்டதை அறிந்த வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று அங்கு வந்தனர். மேலும் அனுமதி இல்லாமல் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டு இருப்பதாகவும், அதை அகற்றும்படியும் சிலை அமைப்பாளர்களிடம் அதிகாரிகள் கூறினர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் பலர் அங்கு திரண்டனர்.
மேலும் சிலையை அகற்றக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சிலை அமைப்பாளர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது அனுமதி இல்லாமல் சிலை வைக்கப்பட்டு உள்ளதால் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் திருவள்ளுவர் சிலை கிரேன் மூலம் அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் செய்திகள்