மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-11 17:18 GMT
மானாமதுரை, ஆக
மானாமதுரை ெரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கி வந்த ெரயில் கட்டண சலுகைகள், பயன்கள் பறிக்கப்பட்டதை மீண்டும் வழங்க கோரியும், ெரயில்வே நடைமேடை கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், புதுச்சேரி, சண்டிகார் போன்ற யூனியன் பிரதேசங்களில் வழங்குவதை போன்று மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் மானியம் வழங்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழு உறுப்பினர் சங்கர் அம்பேத்கர், மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்