ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆனால் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

Update: 2021-08-11 16:48 GMT
பொள்ளாச்சி

ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆனால் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. 

ஆடிப்பூரம்

ஆடிப்பூரத்தையொட்டி அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு வளையல் காப்பு அணிவிக்கப்படும். பக்தர்கள் கொடுக்கும் வளையல்கள் பூஜையில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். பின்னர் அந்த வளையல்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இதற்கிடையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் நேரடி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கோவில்களில் ஆடிப்பூரத்தை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
 
சிறப்பு பூஜைகள் 

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நுழைவு வாயில் பகுதியில் தேங்காய், பழம் வைத்து அம்மனை தரிசனம் செய்தனர். 

பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.
 
இதை தொடர்ந்து பத்ரகாளியம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதேபோன்று கோட்டூர் ரோட்டில் உள்ள விண்ணளந்த காமாட்சியம்மன் அபிஷேக மற்றும் வளையல் மாலை அணிந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து ரங்கநாயகி ஆண்டாள் கோலத்தில் அம்மன் அருள்பாலித்தார். 

சுப்ரமணியசுவாமி கோவில் 

இதேபோன்று சூலக்கல் மாரியம்மன், பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள மாகாளியம்மன், கரியகாளியம்மன், ஜோதி நகர் விசாலட்சுமியம்மன் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. 

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பிரத்தியங்கராதேவிக்கு வரமிளகாய்களை கொண்டு நிகும்பரா யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தின் போது பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக யாகத்தில் வரமிளகாய்களை போட்டு வழிபாடு செய்தனர். 

பக்தர்கள் வேண்டுதல் 

இந்த ஆடிப்பூர நிகும்பரா யாகத்தில் கொரோனா தொற்று முற்றிலும் அழிந்து போக வேண்டும், இனிமேல் யாரும் கொரோனாவின் தாக்குதலுக்கு ஆளாகக்கூடாது என்று பக்தர்கள் வேண்டிக்கொண்டனர்.

 இந்த யாகத்தில் வால்பாறை சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்