ஊராட்சி செயலாளர்கள் கூட்டம்

வத்தலக்குண்டுவில் ஊராட்சி செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

Update: 2021-08-11 16:48 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடுவது பற்றியும், ஊராட்சிகளில் வணிக நல வாரியம் அமைப்பது பற்றியும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டது. 

கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயலட்சுமி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்