கொதிக்கும் எண்ணெய் சட்டியில் பக்தர்கள் கையைவிட்டு வடை எடுத்தனர்

ஆதிபராசக்தி கோவில் ஆடிப்பூர விழாவில் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் பக்தர்கள் கையைவிட்டு வடை எடுத்தனர்.

Update: 2021-08-11 16:26 GMT
கண்ணமங்கலம்

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே துரிஞ்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. 

தொடர்ந்து பக்தர்கள் தங்கள் மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தும், கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையைவிட்டு வடை எடுத்து காணிக்கை செலுத்தினர். 

கொதிக்கும் எண்ணெயில் எடுத்த 7 வடைகள் அம்மனுக்கு படையலிட்டு ஏலத்தில் விடப்பட்டது. 

குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் முதல் வடையை 5,100 ரூபாய்க்கும், 7-வது வடை ரூ.900 என மொத்தம் 7 வடைகள் 19,400 ரூபாய்க்கு ஏலம் போனது.

தொடர்ந்து அம்மன் புறப்பாடும் நடைபெற்றது. 

மேலும் செய்திகள்