பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-11 16:17 GMT
நாகப்பட்டினம்:-

பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பிளஸ்-2 மாணவியுடன் காதல்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள குருவாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லதுரை(வயது 25). கூலித்தொழிலாளி. இவர்  17 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார். 
அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி செல்லதுரை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. இதை கவனித்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து மாணவியிடம் கேட்டனர். 

7 மாதம் கர்ப்பம்

அப்போது செல்லதுரை, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும், இதனால் மாணவி 7 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். 
அதன்பேரில் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்லதுரையை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்