ஒரே நாளில் 229 பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 229 பேருக்கு கொரோனா

Update: 2021-08-11 16:07 GMT
ஒரே நாளில் 229 பேருக்கு கொரோனா
கோவை

கோவையில் நேற்று முன்தினம் 225 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் சுகாதார துறை வெளியிட்ட பட்டியல்படி கோவையில் நேற்று 229 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்து 863 ஆக உயர்ந்து உள்ளது.

கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 203 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து இதுவரை தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 403 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 2,259 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது பெண், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது ஆண் என 2 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்தனர். மாவட்டத்தில் இதுவரை 2,202 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் தற்போது 493 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்