திருவழுதிநாடார்விளை முத்துமாலை அம்மனுக்கு ஆடி பூரம் வளைகாப்பு
திருவழுதிநாடார்விளை முத்துமாலை அம்மனுக்கு ஆடி பூரம் வளைகாப்பு நடந்தது.
ஏரல்:
ஏரல் அருகே உள்ள திருவழுதிநாடார்விளை முத்துமாலை அம்மனுக்கு ஆடி பூரம் வளைகாப்பு நடந்தது. நிகழ்ச்சியில் அம்மனுக்கு வளைகாப்பு அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு கூழ் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.