வண்டலூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

செங்கல்பட்டு, வண்டலூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2021-08-11 10:34 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் எம்.ஜி.ஆர். நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் யோகலட்சுமி (வயது 24). கூலி வேலை செய்து வந்தார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக யோகலட்சுமி மனம் உடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்