கள்ளக்காதல் விவகாரத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் வெட்டிக்கொலை
கள்ளக்காதல் விவகாரத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதலை கைவிடாத மனைவிக்கும் வெட்டு விழுந்தது.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் விஷ்ணு நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 37). இவர் செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் திருவள்ளூர் நெடுஞ்சாலை அருகே வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இந்தப் பட்டறையில் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 10-வது தெருவைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மனைவி லோகேஸ்வரி வேலை செய்து வருகிறார்.
ராஜ்குமாருக்கும் லோகேஸ்வரிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கள்ளக்காதலை கைவிடக்கோரி கணவர் லட்சுமணன் பலமுறை எச்சரித்தும், லோகேஸ்வரி கேட்காமல் கள்ளக்காதலை நீட்டித்து இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன் நேற்று இரவு கத்தியை எடுத்து சென்று பட்டறையில் இருந்த உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் தனது மனைவி லோகேஸ்வரி ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் செத்தார். தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் அடைந்த லோகேஸ்வரி சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சோழவரம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்து விட்டு தலைமறைவான லட்சுமணனை வலைவீசி தேடி வருகிறார்.