கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் முழ்கி வாலிபர் சாவு
கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் முழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னவழுதிலம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று ரெட்டம்பேடு கிராமத்தில் இருந்து பட்டுபள்ளி கிராமத்திற்கு செல்லும் வழியில் 30 அடி ஆழம் உள்ள ஒரு தரை கிணற்றில் லட்சுமணன் குளித்தார். அப்போது அவர் கிணற்றில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கும்மிடிப்பூண்டி தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இருந்து லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.