வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது
சமயபுரம் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமயபுரம்,
சமயபுரம் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
அரிவாள் வெட்டு
சமயபுரம் அருகே உள்ள அகிலாண்டபுரத்தை சேர்ந்த பழனிச்சாமியின் மகன் திவாகர் (வயது 29). இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அப்பகுதியில் உள்ள சிலருக்கும் மாரியம்மன் கோவிலில் அலகு குத்துவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் திவாகர் அவரது வெல்டிங் பட்டறையில் வேலை செய்தபோது அங்கு வந்த அகிலாண்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ்(21), மித்ரன்(21), அருண்குமார்(28), செந்தில்குமார் (42), சுந்தர், விஜயகுமார், ஆனந்த், ரஞ்சித்குமார் ஆகியோர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
4 பேர் கைது
இதில் காயமடைந்த திவாகா் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ், மித்ரன், அருண்குமார், செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள விஜயகுமார், ஆனந்த், ரஞ்சித்குமார், சுந்தர் ஆகியோரை தேடி வருகின்றனர்.