மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி சாவு
காட்டுப்புத்தூர் அருகே மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி இறந்தார்.
காட்டுப்புத்தூர்,
காட்டுப்புத்தூர் அருகே உள்ள காடுவெட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துச்செல்வன் (வயது 40). இவர் நேற்று அங்குள்ள வாய்க்காலில் மீன்பிடிக்க சென்றார். இந்தநிலையில் வாய்க்கால் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், முத்துச்செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.