வடகாடு
வடகாடு அருகே உள்ள அணவயல் செங்கொல்லையை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65). இவரது மகன் சங்கர். இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் மது அருந்தி விட்டு வந்த தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தன்னை தனது மகன் சங்கர் தாக்கி காயம் படுத்தியதாக கந்தசாமி கொடுத்த புகாரின்பேரில் வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். பின்னர் அவர் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.