இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமங்கலம்,ஆக.
திருமங்கலம் அருகே உள்ள கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் பாண்டிச்செல்வி (வயது 18) கீழக் கோட்டையில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பாண்டிச்செல்வி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.