மகா காளியம்மனுக்கு 50 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம்

ஆடிப்பூரத்தையொட்டி மகா காளியம்மனுக்கு 50 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2021-08-10 20:17 GMT
தாமரைக்குளம்:
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், ஆடிப்பூரம் உள்ளிட்ட நாட்களில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஆடிப்பூரத்தையொட்டி நேற்று அரியலூர் கபிரியேல் தெருவில் உள்ள மகா காளியம்மனுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 50 ஆயிரம் வளையல்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்