மூதாட்டியிடம் நகை பறிப்பு

ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-08-10 19:36 GMT
மதுரை,ஆக.
மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவருடைய மனைவி ரேணுகாதேவி (வயது 62). இவர், அண்ணா நகர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், ரேணுகா தேவியின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகையை பறித்து விட்டு தப்பிச்சென்றார். நகை பறிக்கும் போது தவறி விழுந்ததில் ரேணுகாதேவி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து ரேணுகாதேவி அளித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்