பிளஸ்-2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
ஏர்வாடியில் பிளஸ்-2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏர்வாடி:
ஏர்வாடியில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மாணவர்
நெல்லை மாவட்டம் ஏர்வாடி 6-வது தெருவை சேர்ந்தவர் செய்யது மீரான். இவர் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் முகம்மது அசன் (வயது 17). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து பாடங்களை படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவில் வீட்டில் படுத்திருந்த முகம்மது அசன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.
தூக்குப்போட்டு தற்கொலை
அப்போது செய்யது மீரானுடைய வீட்டின் பக்கத்து வீடு பின்புற வளாகத்தில் முகம்மது அசன் கயிற்றால் தூக்குப்போட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனை பார்த்த அவருடைய வீட்டினர் கதறி அழுதனர். இதுகுறித்து ஏர்வாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று முகம்மது அசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வீட்டில் படுத்திருந்த முகம்மது அசன் எழுந்து பக்கத்து வீட்டின் பின்புற வளாகத்துக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்ற காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏர்வாடியில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.