பந்தலூர்
பந்தலூர் தாலுகா பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இங்குள்ள பொன்னானி, சோலாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கோரஞ்சால் உள்பட பல பகுதிகளில் மண்சரிவுகளும் ஏற்பட்டது.
இந்த நிலையில் பலத்த மழை பெய்தது. அப்போது எருமாடு அருகே வெட்டு வாடியில் மேரி என்பவரின் வீட்டின் பின்புறம் உள்ள சுவர் இடிந்து விழுந்தது. ஆனால் இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர்.