மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம். கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்
மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம். கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்;
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மீன் வளர்ப்பினை விரிவுபடுத்திட மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஒரு ஹெக்டேரில் ரூ.7 லட்சம் செலவு செய்து மீன் குளம் அமைத்திட 50 சதவீதம் மானியமாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு ஹெக்டேர் நீர்ப்பரப்பில் மீன் வளர்ப்பு செய்திட ஆகும் உள்ளிட்டு செலவினத்திற்கான தொகையான ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரத்தில் 40 சதவீதம் மானியமாக மொத்தம் ரூ.60 ஆயிரம் பின்னேற்பு மானியமாக அளிக்கப்படும்.
மீன் வளர்ப்பு குளங்கள் புதியதாக அமைக்க பயனாளி சொந்த நிலம் அல்லது 5 வருட குத்தகைக்கு பெற்ற நிலம் வைத்திருக்க வேண்டும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையிலும், தகுதியின் அடிப்படையிலும் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், காந்தி நகர், காட்பாடி, வேலூர்-6 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0416-2240329, 9384824248 என்ற தொலைபேசி எண் மூலமோ தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவம் பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.