சிறுமி உள்பட 5 பேர் படுகாயம்

வேடசந்தூர் அருகே ஆட்டோ மீது கார் மோதியதில் சிறுமி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-08-10 17:42 GMT
வேடசந்தூர்: 

வேடசந்தூர் அருகே நாகம்பட்டியை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 35). ஆட்டோ டிரைவர். நேற்று மாலை இவர், தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கோட்டையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். கரூர்-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் காக்காத்தோப்பு பிரிவு அருகே நந்தகோபால் சாலையை கடக்க முயன்றார். 


அப்போது பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார், ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதில் டிரைவர் நந்தகோபால், பயணம் செய்த சிவகங்கையை சேர்ந்த இருளன் (45) மற்றும் அவரது உறவினர்கள் போதும்பொண்ணு (40), அஜித் (18), தருணிகா (2) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். 


அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்