பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்கள்
பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்கள்
கூடலூர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப் பகுதியில் அரிய வகை தாவரங்கள், மூலிகைகள் மற்றும் விலை உயர்ந்த சந்தனம், ரோஸ்வுட் உள்ளிட்ட மரங்கள் அதிகளவு உள்ளது.
தற்போது மழைக்காலம் என்பதால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அரிய வகை தாவரங்கள் மூலிகைகளும் செழித்து வளர்ந்து வருகிறது.
ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அரிய வகையாகக் கருதப்படும் செங்காந்தள் மலர்கள் பூத்து வருகிறது.
கூடலூர் வனப்பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த செங்காந்தள் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதை பொதுமக்கள், வன ஆர்வலர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.