திருப்பூர் குமரன் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி

திருப்பூர் குமரன் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி

Update: 2021-08-10 17:30 GMT
திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் காலை நேரத்தில் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. நேற்று திருப்பூர் குமரன் ரோட்டில் காலை நேரத்தில் வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது. வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து ஊர்ந்து சென்றதை காண முடிந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் மாலை 5 மணிக்குள் அடைக்கப்படுகிறது. இதனால் மக்கள் காலை நேரத்தில் கடைவீதிகளுக்கு வந்து செல்கிறார்கள்.
அதுபோல் தொழில் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களும் காலை நேரத்தில் செல்வதால் வாகன நெரிசல் ஏற்பட காரணமாகிறது. மேலும் குமரன் ரோட்டில் வங்கிகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், தாசில்தார் அலுவலகம், போலீஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இருப்பதால் ரோட்டின் இருபுறமும் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி சென்று விடுகிறார்கள். இதுவும் வாகன நெரிசலுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதுபோல் காமராஜர் ரோட்டிலும் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமடைந்து வருகிறார்கள். பிரதான சாலைகளில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்