தலித்விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தலித்விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அவினாசி:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஊழல் வழக்கில் கைது செய்ய வேண்டும் ௭ன தலித் விடுதலைக்கட்சியினர் அவினாசி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் சகுந்தலா தங்கராஜ் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் மூர்த்தி, மேற்கு மண்டல செயலாளர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.