திருமணமான 4 மாதத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை

கண்ணமங்கலம் அருகே திருமணமான 4 மாதத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் கவிதா விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2021-08-10 17:10 GMT
கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே திருமணமான 4 மாதத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் கவிதா விசாரணை நடத்தி வருகிறார்.

4 மாதத்திற்கு முன்பு திருமணம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 39). அவரது மகள் அகிலா (19). இவருக்கும், ஆரணி ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஏழுமலை என்பவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

தற்போது ஆடிமாதம் என்பதால் அகிலா தனது தாய் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில் கடந்த 4-ந்்தேதி அகிலா வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். 

சிகிச்சை பலனின்றி சாவு

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலனஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அகிலா பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து அகிலாவின் தாய் விஜயா கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்தார். 

தற்கொலை செய்து கொண்ட அகிலாவுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் ஆரணி உதவி கலெக்டர் கவிதா மேல் விசாரணை நடத்தி வருகிறார். 

திருமணமான 4 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்