தாராபுரம் அருகே லாரியின் பின்புறம் மோட்டார்சைக்கிள் மோதியதில் தையல் தொழிலாளி பலி
தாராபுரம் அருகே லாரியின் பின்புறம் மோட்டார்சைக்கிள் மோதியதில் தையல் தொழிலாளி பலி
தாராபுரம்:
தாராபுரம் அருகே லாரியின் பின்புறம் மோட்டார்சைக்கிள் மோதியதில் தையல் தொழிலாளி பலியானார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தையல் தொழிலாளி
தாராபுரம் தளவாய் பட்டினம் சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் அரவிந்தசாமி (வயது 21). தையல் தொழிலாளி.
இவர் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு மண்டல புதூரில் உள்ள பெரியப்பா சின்னசாமி என்பவரது வீட்டிற்கு சென்றுவிட்டு, சோமனூத்து வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
லாரியின் பின்புறம் மோதல்
அப்போது சோமனூர் கோழிப்பண்ணை அருகே அவருக்கு முன்னே சென்றுகொண்டிருந்த லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, காரத்தொழுவில் உள்ள தனியார் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அரவிந்தசாமி கொண்டு வந்தனர்.
அப்போது பணியில் இருந்த டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.