திருவண்ணாமலை நகராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நிறுத்தம்
திருவண்ணாமலை நகராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் 2 நாட்களாக தடுப்பூசி வராததால் தற்போது கையிருப்பு 1,900 மருந்துகளே உள்ளன. இவை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே போடப்பட்டு வருகிறது.
நகராட்சி வார்டுகளில் நடத்தப்பட்டு வந்த சிறப்பு முகாம் நேற்று நடைபெறவில்லை. தடுப்பூசிகள் வந்த பின்னரே இந்த முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.