பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது

பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது

Update: 2021-08-10 16:53 GMT
துடியலூர் 


கோழி வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

கோழி வியாபாரம்

கோவை இடையர்பாளையம் அருகே டி.வி.எஸ். நகர் கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜோஸ் (வயது60). சமையல் தொழிலாளி. இவருடைய மனைவி அல்போன்சா (51). இவர், வீட்டின் மொட்டை மாடியில் கோழி, புறா வளர்த்து வருகிறார். இங்கு கோழி வாங்குவது போல் ஒருவர் வந்து அவருடைய கணவரின் செல்போன் எண்ணை வாங்கி உள்ளார். 

இதற்கிடையே சமையல் வேலை இருப்பதாக செல்போனில் தகவல் வந்தது. உடனே அவர் வெளியே சென்றார்.இந்த நிலையில் அல்போன்சா வீட்டிற்கு கோழி  வாங்குவது போல் ஏற்கனவே வந்த நபர் மீண்டும் வந்தார். 

அவர், கோழி வாங்குவது போல் நடித்து திடீரென்று அல்போன்சாவை தாக்கி வாயை துணியால் கட்டினார். பின்னர், அவர், அல்போன்சாவின் கழுத்தில் இருந்த 5½ பவுன் சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றார்.

2 பேர் கைது

இது குறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண் டியன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மேற்பார்வை யில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்.

இதில், அல்போன்சாவிடம் நகை பறித்தது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த காளீஸ்வரன் (வயது29) மற்றும் அவருடைய கூட்டாளியான கோவை சுண்டப்பாளையம் அஜ்ஜனூரை சேர்ந்த கணேசன் (31) என்பதும், 

அவர்கள் நகையை திண்டுக்கல்லில் அடமானம் வைத்து ஜாலியாக செலவு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்