திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடிப்பூர விழா தேரோட்டம்

ஆடிப்பூர விழா தேரோட்டம் நடந்தது.

Update: 2021-08-10 13:24 GMT
திருவாரூர்:-

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பூர விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நாள்தோறும் அம்மன் புறப்பாடு கோவில் பிரகாரத்தில் நடைபெற்று வந்தது. இதில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. விழாவில் நேற்றுமுன்தினம் ஆடிப்பூர தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கிழக்கு கோபுர வாசல் அருகே சிறிய தேரில் எழுந்தருளினார். இதையடுத்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரி அம்மனுடன் கோவில் பிரகாரத்தில் தேர் வலம் வந்தது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்