தூத்துக்குடியில் தீயில் கருகி பெண் பலி

தூத்துக்குடியில் தீயில் கருகி பெண் பலியானார்

Update: 2021-08-10 11:40 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணாநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி சுடலைகனி (வயது 36). இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக உடையில் தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய சுடலைகனியை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்