கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவில் கொடைவிழா
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவில் கொடைவிழா நடந்தது;
கோவில்பட்டி:
கோவில்பட்டி லெனின் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கொடை விழா நேற்று நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், அதனை தொடர்ந்து பால்குட ஊர்வலமும், காலை 7.45 மணிக்கு மேல் கருப்பசாமி, கற்பக விநாயகர் பிரதிஷ்டை நிகழ்ச்சியும், முத்து மாரியம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. காலை 10 மணிக்கு அக்னி சட்டி ஊர்வலமும், தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடந்தது. பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 12 மணிக்கு சாமக்கொடை நிகழ்ச்சி நடந்தது.