கோவில்பட்டி அருகே ஓடை ஆக்கிரமிப்பை ஒரு வாரத்தில் அகற்ற ஏற்பாடு சமாதான பேச்சுவார்த்தையில் முடிவு
கோவில்பட்டி அருகே ஓடை ஆக்கிரமிப்பை ஒரு வாரத்துக்குள் அகற்ற ஏற்பாடு செய்வதாக சமாதான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே ஓடை ஆக்கிரமிப்பை ஒரு வாரத்துக்குள் அகற்ற ஏற்பாடு செய்வதாக சமாதான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
சாலைமறியலுக்கு முயற்சி
கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு கீழ்புறம் செல்லும் நீர்வழி பாதை மற்றும் கற்றாைழ ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் கடந்த 5-ந்தேதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலுக்கு முயன்றனர்.
உடனே அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் தாசில்தார் அமுதா தலைமையில் நடந்தது.
ஆக்கிரமிப்பை அகற்ற...
தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி ெபாறியாளர் ஜெய் சந்தோஷ், மேற்பார்வையாளர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் சங்கிலி பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஒரு வாரத்தில் நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சாலைமறியல் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.