கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2021-08-10 05:30 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். அப்போது திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்