ராசிபுரத்தில் ரூ.60 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரத்தில் ரூ.60 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடந்தது.

Update: 2021-08-10 02:42 GMT
ராசிபுரம்,

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் ராசிபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. 

இந்த ஏலத்திற்கு அக்கரைபட்டி, பொரசல்பட்டி, மல்லசமுத்திரம், மாமுண்டி, ராசாபாளையம், மதியம்பட்டி, நத்தமேடு, குருசாமிபாளையம், வெண்ணந்தூர், மின்னக்கல், சவுதாபுரம், உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுரபி ரக பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில் கோவை, அவிநாசி, திருப்பூர், ஆத்தூர், சேலம், மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். 

இந்த ஏலத்தில் 1,662 சுரபி ரக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். நேற்று நடந்த ஏலத்தில் ஒரு குவிண்டால் சுரபி ரக பருத்தி குறைந்தபட்சமாக ரூ.9,999 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.10,699-க்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தம் 1662 சுரபி ரக பருத்தி மூட்டைகள் ரூ.60 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

மேலும் செய்திகள்