கோவையில் 235 பேருக்கு கொரோனா
கோவையில் 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவை,
கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 235 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்து 405 பேராக உயர்ந்து உள்ளது.
இதுதவிர கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 223 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 2 லட்சத்து 26 ஆயிரத்து 983 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர்.
கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 88 வயது முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,194 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்கு 2,228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.