உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் 7 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் 7 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.;
ஆட்டையாம்பட்டி:
சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் செயல் அலுவலர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா பரவலை தடுக்க அரசு வழிகாட்டுதலின் பேரில் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் 7 நாட்கள் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (புதன்கிழமை) மற்றும் வருகிற 13, 14, 15-ந் தேதிகளிலும், 20, 21, 22-ந் தேதிகளிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. மேலும் சாமிக்கு மட்டும் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.