வேப்பந்தட்டை:
வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் பெரிய ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியாக மலையாளபட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 56) அரும்பாவூரை சேர்ந்த மூக்கன் (36) ஆகியோர் டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.