மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின
கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின.;
பெரம்பலூர்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளை ஆகஸ்டு 9-ந்தேதி முதல் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நேற்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதில் கல்லூரிகளுக்கு சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் வந்து மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தினர்.
கல்லூரிகளில் இளநிலை 2, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கும், முதுநிலையில் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தன.