தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-09 20:12 GMT
உசிலம்பட்டி,ஆக.
உசிலம்பட்டி அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்தவர் தமிழன். இவரது மனைவி சித்ரா (வயது 39). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சித்ராவின் கணவர் தமிழன் டெல்லியில் தோசை கடை நடத்தி வருகிறார். தற்போது சித்ரா தனது பிள்ளைகளுடன் புதூர் கிராமத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று சித்ரா வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்