விருதுநகர்
விருதுநகர் அருகே கூரைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீநகரில் வசிப்பவர் விஜய அமிர்தராஜ். இவர் வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை கோழியின் கூட்டிலிருந்து சத்தம் வரவே சென்று பார்த்தார். உள்ளே பார்த்தபோது கூட்டினுள் கோழிக்குஞ்சினை விழுங்கிய படி இருதலை மணியன் பாம்பு இருந்தது. உடனே இதுபற்றி விருதுநகர் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து இருதலை மணியன் பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.