காரியாபட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

காரியாபட்டி பேரூராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட, திட்டப்பணிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-09 19:51 GMT
காரியாபட்டி
காரியாபட்டி பேரூராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட, திட்டப்பணிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
காரியாபட்டி பேரூராட்சியில் 2020-2021-ம் ஆண்டுக்கான பொது நிதி திட்டத்தின் கீழ் சாலை அமைத்தல் மற்றும் காரியாபட்டி பேரூராட்சி திருமண மண்டபம், செவல்பட்டி சமுதாய கூடம் ஆகியவற்றை பராமரிப்பு செய்தல் போன்ற பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 
இந்த வேலைகளில் ஒரு சில தெருக்களில் சாலை பணி முடிந்துள்ளது மேலும் பல சாலைகள் வேலைகள் செய்யப்படவில்லை. இந்தநிலையில் காரியாபட்டி அ.தி.மு.க. முன்னாள் பேரூராட்சி தலைவர் பழனி தலைமையில் முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் நிறுத்தி வைக்கப்பட்ட பணிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி காரியாபட்டி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கோரிக்கை
ேமலும் செயல் அலுவலர் முருகனை சந்தித்து விரைவில் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்