முதியவர் தற்கொலை

களக்காட்டில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-09 19:37 GMT
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழவடகரை, இந்திராநகரை சேர்ந்தவர் பண்டாரம் (வயது 76). கூலி தொழிலாளி. இவரது மனைவி பலவேசம். இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் சென்ற போது பண்டாரம் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவர் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த பண்டாரம் சம்பவத்தன்று இரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்