சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-09 19:07 GMT
க.பரமத்தி
தென்னிலை அருகே உள்ள முத்தனம்பாளையத்தில் சிலர் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்னிலை போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சேவல் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிலர் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் முத்தனம்பாளையத்தை சேர்ந்த ருத்ரமூர்த்தி (வயது 31), துக்காச்சி காட்டம்பட்டியை சேர்ந்த நந்தகுமார் (32), ஈரோடு மாவட்டம், கொடுமுடியை சேர்ந்த சரவணன் (30), விக்ரம் (20), திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த விஸ்வநாதன் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 சேவல், 2 கார், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.12 ஆயிரத்து 990 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்