காவலர் பணிக்கான 2ம் கட்ட உடற்தகுதியில் முன்னாள் ராணுவ வீரர்கள் 100 பேர் தேர்வு

முன்னாள் ராணுவ வீரர்கள் 100 பேர் தேர்வு

Update: 2021-08-09 18:33 GMT
வேலூர்

2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வில் தேர்வான வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 5-வது நாளாக நேற்று நடந்த உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் 107 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 100 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம் உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இதில், 100 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு அடுத்தக்கட்டமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்