ராணிப்பேட்டையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-09 18:11 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை)

ராணிப்பேட்டை முத்துக்கடையில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், விலைவாசி உயர்வை தடுத்திட வேண்டும், 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும், நாளொன்றுக்கு கூலியாக ரூ.600 வழங்க வேண்டும்.

கொரோனா பாதித்த குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கிட வேண்டும், பொதுத்துறையை பாதுகாத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், விவசாய தொழிலாளர்கள் கூட்டமைப்பினர், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்