கோவில் நிலத்தை மீட்டுத்தர வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு
கோவில் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா ஜமீன் கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அந்தக் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலின் தர்மகர்த்தா சுப்பிரமணி என்பவரின் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவர்கள் போலி பட்டா மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
எனவே கோவில் நிலத்தை மீட்டு, மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.