39 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்படும் நூலகம்

பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூரில் 39 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது. அதற்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2021-08-09 17:10 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூரில் 39 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது. அதற்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

வாடகை கட்டிடத்தில் நூலகம் 

பொள்ளாச்சி அருகே சமத்தூரில் கிளை நூலகம் உள்ளது. இந்த நூலகம் கடந்த 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்பட்டு வருகிறது. 

ஆனால் நூலகம் இதுவரை வாடகை கட்டிடத்தில்தான் செயல்பட்டு வருகிறது. அதுவும் ஓடுகள் வேயப்பட்ட கட்டிடம். எனவே இந்த நூலகத்துக்கு சொந்தமாக கட்டிடம் கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- 

சொந்த கட்டிடம் 

சமத்தூரில் செயல்பட்டு வரும் நூலகம் கடந்த  39 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. நூலகத்திற்கு சொந்தமாக 4¼ சென்ட் நிலம் உள்ளது. அதில் கட்டிடம் கட்ட இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்த நூலகத்தில் தினமும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வந்து நூல்களை வாசித்து வருகிறார்கள். 

மேலும் மாணவர்கள் போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நூலகம் செயல்பட நடவடிக்கை எடுப்பதுடன், சொந்தமான கட்டிடம் கட்ட வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்