சமூக விழிப்புணர்வு கூட்டம்
பழனி அருகே போலீஸ் மனித உரிமைய பிரிவு சார்பில் சமூக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பழனி :
பழனி அடிவாரம், டவுன் போலீஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆய்வு செய்தார். தொடர்ந்து பழனி உட்கோட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் போலீஸ் துறையின் மனித உரிமை பிரிவு சார்பில், பழனியை அடுத்த கரடிக்கூட்டம் கிராமத்தில் நடந்த சமூக விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், ஆதிதிராவிட மக்களின் அடிப்படை தேவைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை போலீசாரிடம் தெரிவிக்கலாம். தங்கள் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து தீர்வு காணப்படும் என்றார்.
இந்த கூட்டத்தில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர், இன்ஸ்பெக்டர் (தாலுகா) முருகன், ஊராட்சி தலைவர் ராஜ்மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.