மேலும் 12 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.;

Update: 2021-08-09 16:57 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 20-க்கு கீழ் உள்ளது. அதன்படி நேற்று 4 பெண்கள் உள்பட மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

இவர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 310 ஆக அதிகரித்தது. 

அதேநேரம் 13 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 31 ஆயிரத்து 513 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி 166 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்