மாவட்ட அளவிலான வலு தூக்கும் போட்டி
திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான வலு தூக்கும் போட்டி நடந்தது.;
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட வலு தூக்குதல் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான வலு தூக்குதல் போட்டி திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது. சீனியர், ஜூனியர் மற்றும் ஓபன் மாஸ்டர் ஆகிய பிரிவுகளிலும், எடை அடிப்படையில் 59, 66, 74, 84 உள்ளிட்ட 7 சுற்றுகளிலும் போட்டி நடந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், உடற்பயிற்சி நிலையங்களை சேர்ந்த வீரர்கள் என 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போட்டிகளை ஜி.டி.என். கல்லூரி இயக்குனர் துரை தொடங்கி வைத்தார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், சின்னாளப்பட்டி எம்.எஸ்.பி. உடற்பயிற்சி நிலையத்தை சேர்ந்த வீரர்கள் அதிக வெற்றிகளை குவிந்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
திண்டுக்கல் ஸ்டிராங் உடற்பயிற்சி நிலைய வீரர்கள் 2-இடத்தையும், முத்தழகுப்பட்டி ஹக் உடற்பயிற்சி நிலைய வீரர்கள் 3-வது இடத்தையும் பிடித்தனர். பின்னர் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.
பரிசுகளை முன்னாள் உணவு பாதுகாப்பு அலுவலர் சாம்இளங்கோ வழங்கினார். இதில் வலு தூக்கும் சங்கத்தின் தலைவர் செல்வராஜன், செயல் தலைவர் நாகல்வடிவேல், பொதுச்செயலாளர் வேல்முருகன், பொருளாளர் அசோக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஸ்டிராங் உடற்பயிற்சி நிலையத்தினர் செய்திருந்தனர்.